தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (ஏப்.21) மாலை முதல் பரப்புரைக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




