அக்.15 முதல் புதிய ரேஷன் கார்டு அப்டேட் அமலுக்கு வருகிறது. உணவு தானிய விநியோகத்தைச் சீரமைக்கும் புதிய நடவடிக்கையாக தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் செய்யும் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நியாய விலைக் கடைகளில் (FPS) இருந்து நேரடியாக உணவு தானியங்களைப் பெறுவதற்குப் பதிலாக, தங்கள் மாதாந்திர ரேஷனுக்குச் சமமான பணத்தைப் பயனாளிகள் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதியைத் தேர்வு செய்யலாம்.




