கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்து, 8 முதல் 10 பாகிஸ்தான் போர் விமானங்களை அழித்தது” என்று தெரிவித்துள்ளார்.




