ரசக் கற்பூரத்தை பீரோவில் இந்த மாதிரி வைக்காதீங்க..!! பிரச்சனை உங்களுக்குத்தான்..!!

Oplus_131072

குழந்தைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இந்த ரசக்கற்பூரங்களை தவறுதலாக விழுங்கி விட்டால், அதனால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். எனவே ரசக்கற்பூரம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் யாவை மற்றும் அதனை தவிர்ப்பது எப்படி என்பது சம்பந்தமான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக வீட்டின் அலமாரிகளில் உள்ள துணிகளுக்கு அடியில் சிறு சிறு உருண்டைகள் வைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவை ஆங்கிலத்தில் நாப்தலின் பால்ஸ் என்று அழைக்கப்படும் ரசக்கற்பூரம். இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள் பூச்சிகளை விரட்டுவதற்கு உதவியாக இருக்கிறது. பல வருடங்களாக பட்டாடைகள், காட்டன் ஆடைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பார்ப்பதற்கு எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதது போல இருந்தாலும் இந்த ரசக்கற்பூரங்களை அலட்சியமாக பயன்படுத்தும் போது, அதனால் உங்களுடைய துணிகள் மீது கறைகள் படிவதோடு கண்கள் மற்றும் நுரையீரல்களுக்கு மோசமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

மேலும் குழந்தைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இந்த ரசக்கற்பூரங்களை தவறுதலாக விழுங்கி விட்டால், அதனால் மோசமான விளைவுகள் உண்டாகலாம். எனவே ரசக்கற்பூரம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் யாவை மற்றும் அதனை தவிர்ப்பது எப்படி என்பது சம்பந்தமான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரசக்கற்பூரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்:ரசக்கற்பூரங்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் பூச்சிகளை கொல்லும் அளவுக்கு வலிமையானவை. அதை தவறான வழியில் பயன்படுத்தும் போது அதனால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படலாம். தொடர்ச்சியாக அந்த வாசனையை நுகரும்போது அதனால் தலைவலி, குமட்டல், கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

குறிப்பாக ஆஸ்துமா அல்லது நுரையீரல் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது மோசமான விளைவுகளை உண்டாக்கும். தவறுதலாக ஒரு ரசக்கற்பூரத்தை விழுங்கி விட்டால் கூட அதனால் வாந்தி, வயிற்று வலி, மஞ்சள் காமாலை அல்லது மோசமான சூழ்நிலைகளில் ரத்த சிவப்பு அணுக்கள் சேதம் அடையலாம். எனவே ரசக்கற்பூரங்களாஇ சரியான முறையில் வைப்பது மிகவும் அவசியம்.

ரசக்கற்பூரம் பயன்படுத்தும் போது நாம் செய்யும் சில தவறுகள்:*ரசக்கற்பூரங்களை நேரடியாக துணிகள் மீது வைப்பதால் துணிகளுக்கு சேதம் அல்லது மஞ்சள் நிற கறைகள் ஏற்படலாம்.*திறந்த அலமாரிகளில் வைப்பதால் ரசக்கற்பூரங்களில் இருந்து வரும் வாசனை மொத்த அறை முழுவதும் பரவும்.*ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமான ரசக்கற்பூரம் பயன்படுத்துவது.*உணவு அல்லது தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு அருகில் ரசக்கற்பூரம் வைப்பது.இந்த தவறுகளை தவிர்ப்பதன் மூலமாக உங்களுடைய ஆடைகளை பாதுகாப்பதோடு, வீட்டையும் பாதுகாப்பாக வைக்கலாம்.

ரசக்கற்பூரங்களாஇ பாதுகாப்பாக எப்படி வைப்பது?-ரசக்கற்பூரத்தை நன்றாக மூடப்பட்ட டப்பாக்கள் அல்லது சிப்-லாக் பைகளில் வைப்பது அதிலிருந்து வரும் வாசனை நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்க உதவும்.-ரசக்கற்பூரத்தை துணிகள் மீது நேரடியாக வைக்க வேண்டாம்.-பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.கூடுதல் ரசக்கற்பூரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.-ஆடைகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை திறந்த வெளியில் ஒரு சில நிமிடங்கள் வைத்து விட்டு பிறகு அணியவும்.-சிறந்த பாதுகாப்பு பெறுவதற்கு ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ரசக்கற்பூரத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

ரசக்கற்பூரத்திற்கு பதிலாக துணிகளை பாதுகாக்க ஏதேனும் வழிகள் உள்ளதா?கெமிக்கல் பயன்படுத்தாமல் இயற்கை தீர்வை நாடும் நபர்களுக்கு உலர்ந்த வேப்பிலை ஒரு பாரம்பரிய தீர்வாக அமைகிறது. இது தவிர லாவண்டர் பாக்கெட்டுகள், தேவதாருக்கட்டைகள் அல்லது கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Read Previous

பால் பொங்குவது எதனால்..?? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா..??

Read Next

வெற்றிலை கொடி செழித்து வளரணுமா.. இப்போ காபி தூளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular