ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகம்மது பாகிம் என்ற பள்ளி மாணவர் வழக்கம்போல இன்று காலை (அக்., 09) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில், சுருண்டு விழுந்துள்ளார். உடனே அவரை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




