நாமக்கல் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சதீஷ்குமார் (30) என்பவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்து, அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமாரைக் கைது செய்துள்ளனர். சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.




