தமிழ்நாடு முழுவதும் 12,480 ஊராட்சிகளில் இன்று (அக்., 11) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொள்கிறார். தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குதல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, பருவமழை முன்னெச்சரிக்கை, 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதே போல், குடிநீர், தெருவிளக்குகள், குப்பை அகற்றுதல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.




