தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே தூத்துக்குடி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அக்.17, 21 ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06297), மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்.18, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06298), மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் 2 மார்க்கங்களிலும் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.




