Oplus_131072
கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி ………..
தேவையான பொருட்கள்……
1கப் பச்சரிசி
1/2கப் பாசிப்பருப்பு
3கப் தண்ணீர்
1 1/2கப் நாட்டு சக்கரை
3டேபிள்ஸ்பூன் நெய்
1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
12உடைத்த முந்திரி
10காய்ந்த திராட்சை
1டேபிள்ஸ்பூன் சாரை பருப்பு
செய்முறை ………
1/2 கப் பாசிப்பருப்*பு கடாயில் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.1கப் பச்சரிசியை எடுத்து வைக்கவும். இரண்டையும் சேர்த்து கழுவி வைக்கவும்.1 1/2 கப் நாட்டுச்சக்கரை எடுத்து வைக்கவும்.12 உடைத்த முந்திரி,10 காய்ந்த திராட்சை எடுத்து வைக்கவும்.
கழுவி வைத்த அரிசி பாசிப்*பருப்பு இரண்டையும் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வேகவிட்டு, நன்கு குழைய வேகவிடவும். நாட்டுச் சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடு*ப்பில் வைத்து பாகு காய்ச்சி வைக்கவும்.
நாட்டுச் சர்க்கரை பாகுவை வடித்து குக்கரில் சேர்த்து விடவும்.நன்கு கலக்கி ஒரு கிண்ணத்தில் எடு*த்து வைக்கவும். 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, 1 டீஸ்பூன் சாரைப்பருப்பு, எடு*த்து வைத்த முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்து விடவும்.
சுவையான நாட்டு சர்க்கரை பொங்கல் ரெடி.




