கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டிடத்தையும் கட்டாமல் இருந்ததற்கு என்ன காரணம்?.. படித்ததில் பிடித்தது..!!

தமிழகத்தில் முன்பெல்லாம் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், அந்த ஊரில் இருக்கும் ஆலயங்களின் கோபுரம் தான் அதிக உயரமாக இருக்கும். கோயில் கோபுரத்தை விட வேறு எந்தவொரு கட்டிடமும் உயரமாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஏன் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்று தெரியுமா?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அந்த கலசங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆன்மிக விளக்கங்களை எல்லாம் தாண்டி, அந்த கலசங்களின் பின்னால் பெரிய அறிவியல் செயல்பாடும் ஒளிந்திருக்கிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செம்பு என்று கலவையாக ஐம்பொன்களினால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இந்த கலசங்களிலும் அதில் வைக்கப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை அந்த கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், எள் ஆகியவற்றை அந்த கலசங்களில் கொட்டி வைத்தார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என்று இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத் தான் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது! இதை எப்படி அந்த காலத்தில் அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம் தான். அவ்வளவு தானா என்றால் அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களாகவா தொடர்ந்து மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்த காலங்கள் எல்லாம் இருந்தன. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.

அடிப்படையில் கோயில் கோபுரங்களின் உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் இடிதாங்கிகளாக செயல்படுகின்றன. உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000 சதுரமீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதை விட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. இது தான்நமது கலாச்சார உண்மை.

Read Previous

நெட்டி முறித்தல் ஆபத்தா?.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

அக்கறை மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் பற்றிய அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular