Oplus_131072
கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவும் சூரணம்.
மிளகு கீழாநெல்லிச் சூரணம்
தேவையான பொருட்கள்
மிளகு 100 கிராம்
கீழாநெல்லி 250 கிராம்
செய்முறை
முதலில் கீழாநெல்லியை தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்தி நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகை தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
உலரவைத்த கீழாநெல்லியையும் மிளகையும் தனித்தனியாக அரைத்து பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
கீழாநெல்லி இலை கிடைக்கவில்லையென்றால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பொடியை 100 கிராம் வாங்கி கலந்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும்.
சாப்பிடும் முறை
மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும் 21 நாட்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு : இது ஒரு துணை மருந்து தான் ஆகையால் சித்தா & ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.




