பிள்ளையார் முன்பு நாம் போடும் தோப்புக்கரணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Oplus_131072

பிள்ளையார் முன்பாக போடும் தோப்புக்கரணத்தின் யோக ரகசியம் என்ன?

பிள்ளையாருக்கு
முன்பாக
தோப்புக்கரணம் போடுகிறோம்.

எதற்காக தோப்புக்கரணம்
போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை.

அதில் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள காரணங்களையும் ரகசியங்களையும் தொகுத்து அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக சித்தர்களின் குரல்
என்ற முகநூல் பக்கத்தில் படித்த விபரங்களை பகிர்கிறேன்.

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது.

அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது.

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும் இதயத்தில் ஒரு பின்னல் போட்டும் புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது

வலது கால் பெருவிரலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும் இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும் புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது.

சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்.

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது.

அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறது.

அதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது.

Read Previous

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்..!!

Read Next

தபால்காரர்..!!படித்ததில் நெகிழ்ந்த கதை..!! நீங்களும் படிச்சு பாருங்க உங்களுக்கும் கண்ணீர் வரும்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular