இந்த வயிறு ஒரு காலத்தில் உங்கள் குழந்தைகளை 9 மாதங்கள், அவர்களின் வலி, சோர்வு மற்றும் பல..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

உங்கள் திருமண வாழ்வின் தொடக்கத்தில் அவள் உடல் எவ்வளவு அழகாகவும், மென்மையாகவும், செதுக்கப்பட்ட சிலையாகவும் இருந்தது என்பதை நினைவில் வையுங்கள்.

நீங்கள் எப்போதும் நேசித்த அதே மனப்பான்மையுடன் அவள் இன்னும் அதே அழகான பெண் தான்.

 

வித்தியாசம் என்னவென்றால், அவள் உங்கள் குழந்தைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறாள்.

 

அதற்கான அவள் கொடுத்த விலை அவள் கொண்டிருந்த அழகிய உடலை இழந்தது.

 

உங்கள் மனைவியைக் குறை சொல்லாதீர்கள், அவள் உடல்களில் அதிகரித்த தழும்புகள் சொல்லும் அவளின் மேன்மையை. அவள் அவற்றை உதாசீனப்படுத்தினால் உங்களுக்கு பிள்ளைகள் ஏது? இந்த தழும்புகள் வரும் என்றுத் தெரிந்தும் அவள் ஏற்கும் தாய்மை உன்னதத்தின் உச்சம்.

 

ஒரு தாயின் பாசம் அவளை அதற்கெல்லாம் கண்மூடித்தனமாக மாற்றுகிறது பார்த்தீர்களா, அவளுடைய ஒரே கவலை அவளுடைய குழந்தைகளின் நலன் மற்றும் உங்கள் மகிழ்ச்சி.

 

இந்த வயிறு ஒரு காலத்தில் உங்கள் குழந்தைகளை 9 மாதங்கள், அவர்களின் வலி, சோர்வு மற்றும் அதிகரிக்கும் உடல் எடையுடன், பிரசவம் வரை உங்கள் பிள்ளைகளை மூடி பாதுகாத்த இதமான வீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்…

 

நல்ல பெண்மையைப் போற்றுவோம்…

நல்ல தாய்மையைப் போற்றுவோம்..

Read Previous

கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

அன்புள்ள மனைவிக்கு.. கணவன் எழுதிய கடிதம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular