கோவையில் மெட்டில்டா என்ற இளம்பெண், கணவர் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, இருவரையும் அந்தக்கோலத்தில் இருப்பதை அவரது கணவரின் பாட்டி கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கணவருக்கு தெரிந்துவிடும் என அஞ்சிய மெட்டில்டா மூதாட்டியை கொலை செய்துள்ளார். பின்னர், பாட்டி மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய ஜாய்மெட்டில்டா விசாரணையில் சிக்கிக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




