Oplus_131072
கால்களில் வருடங்களாக தங்கி இருக்கும் அழுக்கை 5 நிமிடத்தில் நீக்கி வெண்மையாகுங்கள்…
ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும்.
எப்படியாயினும், அழுக்கான நகங்களை கொண்டிருப்பது இயற்கையான விஷயம் தான் மற்றும் பலர் அசுத்தமான கால் நகங்களை கொண்டவராகவும் இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. எனவே அத்தகைய எளிதான முறைகளைத் தெரிந்து கொண்டு, கால்களை அழகாகவும் வைக்கலாமே!!!
முகம் அளவுக்குப் பாதங்களையும் பளிச்சென்று பராமரிக்க ஓர் அசாத்திய திறமையும் பொறுமையும் தேவை. சில பெண்கள் அதில் கில்லிகள். நேரமின்மையால் பலரும் அந்த விஷயத்தைக் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் பாதம் சம்பந்தப்பட்ட பராமரிப்புகளைத் தெரிந்துகொண்டால் போதும். தொற்றுகள் இல்லாத சுத்தமான, அழகான பாதங்களை நீங்களும் செல்ஃபி எடுக்கலாம்.



