தமிழக அரசு மின்சார வாகனங்களுக்கான 100% சாலை வரி விலக்கு சலுகையை ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அரசாணையின்படி, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து மற்றும் தனிநபர் பயன்பாட்டு மின்சார வாகனங்களுக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.




