ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் (54) மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சக வீரர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், டேமியனின் உடல்நிலை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரரான பிராட் ஹார்டி வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.




