நல்லெண்ணை விளக்கு ஏற்றுவீங்களா..?? இந்த 2 பொருள் சேர்த்தா கொசுக்கள் இருக்காது..!!

நல்லெண்ணையில் விளக்கு எரியும் போது வீட்டில் கொசு தொல்லை இல்லாமல் இருக்க அந்த விளக்கில் இரண்டு பொருட்களை சேர்த்தால் போதும்.

நல்லெண்ணை விளக்கு

வீட்டில் இறைவனின் பிராத்தனைக்கு விளக்கு ஏற்றும் போது அதன் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காததாக இருந்தால் ஒரு கொசுக்கூட வீட்டில் தங்காது.

நம் சமையலறையில் இருக்கும் பொருட்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அது நமது வீட்டு தேவையையும் பூர்த்தி செய்யும்.

இதற்கு முதல் ஒரு கைப்பிடி கிராம்பை இடி உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் விளக்கேற்றும் போது அதற்கு நல்லெண்ணை பயன்படுத்துங்கள்.

இதனுடன் கால் டீஸ்பூன் இடித்த கிராம்பு பொடியைச் சேர்க்க வேண்டும். இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த இரண்டையும் கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் இதில் திரி போட்டு மாலை நேரங்களில் விளக்கேற்றவும். இந்த விளக்கு, வீட்டில் நேர்மறை ஆற்றலை நிரப்புவதுடன், கொசுக்கள், பூச்சிகள் மற்றும் ஈக்கள் தொல்லையில் இருந்தும் விடுதலை தரும்.

முக்கியமாக கிராம்பின் நறுமணம் கொசுக்களுக்குப் பிடிக்காது இதனால் அவை வீட்டிற்குள் நுழையாது. இது உங்கள் வீட்டில் அமைதியான, நேர்மறை சூழலை உருவாக்கும்.

இது தவிர இன்னும் பல நன்மைகளை வீட்டிற்கு கொண்டு வரும்.

Read Previous

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!! உஷாரா இருங்க மக்களே..!!

Read Next

தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular