ரூ.38 கோடி மதிப்பில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த உதயநிதி..!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட 61 புதிய பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளன. இச்சேவையை சென்னை தீவுத்திடலில் இன்று (ஜன.6) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த புதிய பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக 31 இருக்கைகள் மற்றும் 15 படுக்கை வசதிகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

Read Previous

புதிய பாடத்திட்டம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு..!!

Read Next

தெரிந்து கொள்ளுங்கள்..!! தினமும் நடைபயிற்சி செய்வதன் அவசியம் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular