வாழ்க்கையில் எல்லா செல்வங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க நமது உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமாக வாழ தினமும் நடைப்பயிற்சி செய்வது அவசியம். ஆரம்பத்திலேயே தினமும் 10,000 அடிகள் நடப்பது சாத்தியமற்றது. ஆனால், நமது நேரம், உடல் நிலை மற்றும் வயதை பொறுத்து தினமும் 3000 அல்லது 4000 அடிகள் வரை நடப்பதை பழக்கமாக கொள்ளலாம். பின்னர், இதை 1000 அடிகள் அடுத்தடுத்த வாரமோ அல்லது மாதமோ அதிகரிக்கலாம்.




