ஈரோடு மாவட்டம் ஸ்பெஷல் நல்லாம்பட்டி கோழி வறுவல் செய்வது எப்படி..?? செய்வது எப்படி..??

 

தேவையான பொருட்கள்:

சிக்கன் -‌ அரை கிலோ
பூண்டு – இடித்தது பத்து பல்
வர மிளகாய் – 10
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
சின்ன வெங்காயம் – 25
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
தக்காளி -ஒன்று
வரக்கொத்தமல்லி – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
பட்டை -2
லவங்கம்- 4
நல்லெண்ணெய் – நாலு ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் -தேவையான அளவு

முதலில் நல்லாம்பட்டி கோழி வறுவல் செய்வதற்கு மசாலா பொடி தயார் செய்யவும்.
மசாலா பொடி செய்வதற்கு கடாயில் சீரகம், சோம்பு, பட்டை, வரக்கொத்தமல்லி, மிளகு ,கருவேப்பிலை ,இலவங்கம் சேர்த்து வறுத்து பிறகு ஆரியபின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் நல்லெண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் சோம்பு, இடித்த பூண்டு வர மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் தக்காளி பழம் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு சிக்கன் மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்திருந்த மசாலா பொடி தேவையான அளவு உப்பு இவை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் சிக்கனை நன்றாக வேக வைக்கவும். சிக்கன் வெந்தபின் கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான நல்லாம்பட்டி கோழி வறுவல் ரெடி.

Read Previous

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி..!! உங்க ராசியும் இதுல இருக்கா?..

Read Next

உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு மட்டன் கொழுப்பு வைத்து அருமையான தொக்கு ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular