பொதுவாக மூலநோய், வயிற்றுபோக்கு, மற்றும் வேறு விதமான நோய் தொற்றுகள் உள்ளிட்ட பிரச்சினைகளின் விளைவாக ஆசனவாய் புண்கள் ஏற்படுகின்றன.
இதனால் ஆசனவாயில் அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம், இரத்தம் வடிதல் உள்ளிட்ட நோய் நிலைகள் ஏற்படுகின்றன. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
அத்துடன், நாட்டு வைத்தியம் முறைகளின் மூலம் புண்களை ஆற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
இது போன்ற நோய்களை இலகுவாக குணப்படுத்த வேண்டும் என்றால் நோய் நிலைமைக்கான காரணத்தை முதலில் கண்டறிவது அவசியம்.
அந்த வகையில் ஆசனவாய் புண்கள் ஏன் தோன்றுகின்றன?, இதனால் ஏற்படும் பக்க விளைவுகள்?, நிரந்தர தீர்வு உள்ளிட்டவற்றை கீழ் காணும் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆசனவாய் புண்கள் வருவதற்கான காரணங்கள்
1. கோடை காலங்களில் ஏற்படும் அதிகமான வெப்பம் காரணமாகவும், குளிர்காலங்களில் ஏற்படும் ஈரப்பதம் காரணமாகவும் இது போன்ற புண்கள் ஏற்படலாம்.
2. சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்தல், சுத்தம் இல்லாத உள்ளாடைகளை பயன்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும்.
3. வயிற்றில் ஏற்படும் கோளாறு காரணமாக தொடர் வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு இது போன்ற புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
4. சர்க்கரை நோய், தைராய்டு போன்ற நோய்கள் இருப்பின் ஆசனவாய் அரிப்பு ஏற்படும்.
கை வைத்தியம்
ஆசனவாய் அரிப்பு, துர்நாற்றம், தடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் விளக்கெண்ணெய் தடவலாம்.
துத்திக் கீரையை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம் சேர்த்து கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் எரிச்சல் குணமடையும்.
நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்தது. உதாரணமாக புடலங்காய், தானியங்கள், வெண்டைக்காய், மாம்பழம், பப்பாளி பழம் உள்ளிட்டவற்றை கூறலாம்.
கடுக்காயின் மகத்துவம்
கடுக்காய் – 3, இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து ஆகியவற்றை சேர்த்து நெய், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றுப்பெறும்.
ஆசனவாய் புண்களுக்கு கடுக்காய் பொடியை பயன்படுத்துவதால் புண்கள் இலகுவில் ஆற்றப்படுவதுடன், கண் நோய், இருமல், காமாலை, கை கால் நமைச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப் பொருமல் மற்றும் விக்கல் போன்ற நோய்களுக்கும் தீர்வு கொடுக்கின்றது.
கடுக்காய்ப் பொடியை சம அளவில் எடுத்து, நெய்யில் ஊற்றி அதனுடன் வறுக்கவும். பின்னர் 2 கிராம் அளவு இந்துப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றுப்புண்கள் ஆறும்.
மேலும், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுப்புண்கள் தான் காரணம் என்றால் இந்த லேகியத்தை சாப்பிட்டு பார்க்கலாம்.




