ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்..??

Oplus_131072

 

கருப்பு வானம் :
வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது.. இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கும்மிருட்டாக கருப்பாக ஆயிடும்.. மேலும் இப்போது பார்ப்பதை போல அணைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலை யில் கிடைக்கும்.

இடியும் கட்டிடங்கள் :
நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட்டால் ஆன எந்த கட்டிடமும் … அது வீடோ பாலமோ… எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.

ஆவியாகும் கடல் :
தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும் .. எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன் அதாவது வாயு.
அதுவும் அது எப்படி பட்ட வாயு..? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹட்ரோஜன் . எனவே மொத்த கடலும் , ஏரி, குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்விடும் .

நிற்கமுடியா நிலம் :
பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது..

சுடும் சூரியன்:
குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள் நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல. சூரியனில் உள்ள புறஊதா வை ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும் தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :
நம்ம காதுகுள்ளே ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்க படாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்து விடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும் …

இயங்காத இன்ஜின்கள்:
ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும் அங்கங்கே இயங்காமல் நிற்கும் .

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :
குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும். சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான் . அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.

இப்ப சொல்லுங்க…
பூமியில் ஐந்து நொடி…. ஐந்தே ஐந்து நொடி பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..? நிச்சயமாக முடியாது அல்லவா…
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்
அப்படி பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும்..

எனவே
“மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம்”

Read Previous

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்..??

Read Next

தமிழ் புத்தாண்டு அன்று மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது கனி காண்பது ஆகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular