மண் பாத்திரங்களை பழக்க…
நம்முடைய பாரம்பரிய மண்பானையை இப்பொழுது நிறைய பேர் சமையலுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
ஆனால் மண் சட்டியை எப்படி பழக்குவது என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. விரைவில் உடைந்து போகிறது.
நீங்கள் வாங்கிய புது மண் பாத்திரங்களை அகலமான பாத்திரத்தில் நீர் நிறுத்தி 24 மணி நேரம் நீரில் நன்கு மூழ்கி இருக்குமாறு ஊற வைத்து விடுங்கள்.
பிறகு வெயிலில் இரண்டு மூன்று மணி நேரங்கள் காய வைத்து விடுங்கள்.
பிறகு தாராளமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தி மண் பாத்திரத்தின் உள்புறம் வெளிப்புறம் எல்லாவற்றிலும் நன்றாக தடவி விடுங்கள். அப்போது மண் சட்டி நன்றாக எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும்.
அதன் பிறகு வீட்டில் இருக்கும் அரிசி வடித்த கஞ்சி அல்லது அரிசி கலைந்த தண்ணி ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட வேண்டும். அதன் பிறகு மண் சட்டியை சோப்பு போட்டு கழுவி அடுப்பில் வைத்து சமைக்கலாம்.
மண்பானை சமையல் சுவையும் ஆரோக்கியமும்.




