சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடம் புத்தகத்தில் கூட இருப்பதில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடங்கள் புத்தகத்திலும் கூட இருப்பதில்லை.

நீங்கள் எப்போது எல்லாம் அதிகமாக அவமானம் மற்றும் ஏமாற்றம் அடைகிறீர்களோ அந்த நிமிடங்கள் தான், உங்களை உருவாக்குக்கிறது என்று அர்த்தம். அந்த அடிகள் அடுத்த முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்.

அனுபவங்களை சேகரித்து வையுங்கள். இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு செயல்பட அதுவே உதவும்.

ஓரு நிமிடம் உங்கள் கவலைக்கு இடம் கொடுத்தால் நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மகிழ்ச்சியை இழப்பீர்கள். உங்கள் வாழ்வில் எதை இழந்தாலும் துணிச்சலோடு போராடுங்கள் வெற்றி உங்கள் அருகில்.

உறவுகள் கூட நிலவைப்போன்று தான். தூரத்தில் இருக்கும் வரை மட்டுமே ரசித்துக் கொண்டாடப்படும்.

எதையும் பொறுமையோடு தேடுங்கள். பொறாமையோடு தேடாதீர்.

மரியாதையாக பேசுங்கள் என்று ஒருவரிடம் சொல்வதை விட பிறர் மரியாதையாக பேசுமாறு நாம் நடந்து கொள்ளவேண்டும்.

உருவம் என்பது கடவுள் நமக்கு கொடுத்த அடையாளம். ஒழுக்கம் என்பது நமது அடையாளத்திற்கு நாம் கொடுக்கும் உருவம்.

பொதுவாக சரியான பதிலை விட சரியான கேள்வி மிகவும் முக்கியமானது.

நாம் மதிக்கப்படுவதும், போற்றப்படுவதும், நம் உதவிகள் கிடைக்கப் பெறும் வரையில் தான். ஒரு முறையேனும் மறுத்துப் பாருங்கள். ஒன்று மறந்து போவார்கள் அல்லது எதிரியாவார்கள்.

பணமும் பாசமும் ஒன்றுதான். தேவையான இடத்தில் இரண்டுமே இருக்காது.

எதிரிக்கு கொடுக்கும் மன்னிப்பு. நம்மை மனிதனாக்கும். ஆனால், துரோகிக்கு கொடுக்கும் மன்னிப்பு நம்மை மீண்டும் ஒரு முறை முட்டாளாக்கும்.

அன்பில் சந்தோசம் இருக்க வேண்டும், சந்தேகம் இருக்கக்கூடாது. கண்டிப்பு இருக்க வேண்டும், கட்டாயம் இருக்கக்கூடாது. விருப்பம் இருக்க வேண்டும், வெறுப்பு இருக்கக்கூடாது. நம்பிக்கை இருக்க வேண்டும், நடிப்பு இருக்கக்கூடாது. உண்மை இருக்க வேண்டும், பொய் இருக்கக்கூடாது.

 

Read Previous

நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்..!!

Read Next

இன்சுலின் சுரக்க வாழைப்பூ..!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular