தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தத் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூன் மாத இறுதியில் ஆலோசனைகள் நிறைவடைந்து, ஜூலை மாதத்தில் இடைத்தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




