தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அங்கும் தடை நீடிக்கிறது.




