மாலையில் இந்த உணவுகளை கட்டாயம் எடுக்காதீங்க.. இரவு தூக்கத்தில் பிரச்சனை ஏற்படும்..!!

Oplus_131072

மாலையில் இந்த உணவுகளை கட்டாயம் எடுக்காதீங்க… இரவு தூக்கத்தில் பிரச்சனை ஏற்படும்

பொதுவாக மாலை நேரங்களில், குறிப்பாகக் குளிர்காலங்களில் பஜ்ஜி, சமோசா, பீட்சா மற்றும் பாப்கார்ன் போன்ற உணவுகளை நாம் அதிகம் விரும்புகிறோம்.

ஆனால், எண்ணெய்யில் பொரித்த மற்றும் வெண்ணெய் அதிகம் கொண்ட இந்த உணவுகள் செரிமானத்தைக் கடுமையாகப் பாதிப்பதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மோசமடையச் செய்கின்றன.

இது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி இரவு நேரத் தூக்கத்தையும் முற்றாகக் கெடுத்துவிடுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேபோல் பானி பூரி, பேல் பூரி போன்ற தெருவோர உணவுகள் உடலில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைச் சீர்குலைக்கின்றன.

இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுகின்றன. எனவே, மாலை நேரங்களில் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த இனிப்புச் சோளம், சூடான காய்கறி சூப், மசாலா கொண்டைக் கடலை (சுண்டல்) அல்லது கோதுமை மாவில் செய்யப்பட்ட ஆவியில் வெந்த உணவுகளை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

 

Read Previous

சிறிய பழம்..!! பெரிய நன்மைகள்..!! நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

Read Next

வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அதிரடி நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular