ஆபாச புகைப்படங்களைக் கொண்டு மிரட்டல்: இளம்பெண் உயிரிழப்பு!

 

 

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில், முன்னாள் கல்லூரி நண்பர் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 22 வயது நகைக்கடை பெண் ஊழியர் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். விடுதி அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு அபிஷேக் தான் காரணம் என குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, தலைமறைவாக உள்ள அபிஷேக்கை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

ரூ.22 லட்சம் பண விவகாரத்தில் மனைவி கொலை: கணவர் கைது!

Read Next

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை? நியூசிலாந்தில் புதிய மசோதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular