
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு (2025) நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது இத்தொடரை பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடத்த ICC நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால் தொடரை நடத்துவதில் இருந்து விலக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக ஐசிசி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இத்தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றி வேறு இடத்தில் நடத்தினாலோ அல்லது இந்திய அணி பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலில் போட்டிகளை நடத்தும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்காது என கூறப்படுகிறது.