இந்த வருட ஐபிஎல் மிக பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. யாரெல்லாம் முதல் நான்கிடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சென்னை மும்பை போன்ற ஐந்து முறை சாம்பியன்ஸ் புள்ளி பட்டியலில் கீழே இருந்தாலும் அவர்கள் மறுபடியும் அந்த நான்கு இடத்தை பிடிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் நேத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் போட்டி நடந்து முடிந்தது.
அதில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது கடந்த 18 வருட ஐபிஎல் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி படைத்துள்ளது. இவர்கள் டெல்லி கேப்பிடல்சாகவும் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரிலும் ஐந்து சூப்பர் ஓவர்களில் விளையாடி நான்கு போட்டிகளை வென்றுள்ளது.
இதுதான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகமாகும். டெல்லி அணிக்கு அடுத்ததாக பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த ரெக்கார்டை நெட்டிசன்கள் பரவலாக பேசி வருகின்றனர்.




