இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டித்தொகையும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது.
இந்த நிலையில் ஏப்ரல்1-ம் தேதி முதல் ஜூன் 30 வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதில் கடந்த நிதியாண்டின் வட்டி விகிதமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் ஆபிசின் ரெக்கரிங் டெபாசிட்டில் ஒவ்வொரு மாதமும் சரியான தொகையை முதலீடு செய்வதன் மூலம் வட்டியைப் பெறலாம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 16 லட்சம் ரூபாய் வரை திரும்ப பெறலாம். குறைந்தபட்சம் மாதம் ரூ. 100 என்ற தவணையில் ரெக்கரிங் டெபாசிட் முதலீட்டைத் தொடங்கலாம்.
இந்தக் கணக்கில் 5.8% வட்டி அளிக்கப்படுகிறது. கூட்டுத் தொகையின் மூலம் இந்த வட்டி ஒவ்வொரு மூன்றாவது மாதமும் சேர்க்கப்படும். இந்தத் திட்டம் சந்தையுடன் இணைக்கப்படவில்லை அதனால் இதில் கிடைக்கும் வருமானம் குறித்த அச்சம் தேவையில்லை மேலும் இத்திட்டத்தில் உங்கள் பணம் ஒருபோதும் மூழ்காது ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துள்ள 90 சதவீத பணத்தைக் கடன் அல்லது ஓவர் டிராஃப்ட் ஆகப் பெற முடியும்.




