அக்குள் பகுதி ரொம்ப கருப்பா இருக்கா?.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

அக்குள் பகுதிகளில் கருமை நிறமாக இருப்பது பல நேரங்கலில் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விடும்.

இதற்கு காரணம் வியர்வை, காற்றோட்டம் இன்மை, இறந்த கலங்களின் படிவு, முடியை அகற்றுதல், இரசாயணப் பொருட்கள் அடங்கிய கிறீம் வகைகளை பயன்படுத்தல், அல்ககோல் உள்ள டியோரண்ட் பயனப்டுத்தல், போன்ற பல காரணங்களை சுட்டிக் காட்டலாம்.

அது மட்டுமல்லாது அதிகப்படியான உடல் எடை, ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை, சில மருந்துகளின் பயன்பாடு, புற்றுநோய் போன்ற சந்தர்ப்பங்களிலும் அக்குள் பகுதியில் கருமை நிறமாக மாறுகின்றன.

எனவே முதலில் அக்குள் பகுதியின் கருமை நிறத்திற்கு காரணத்தை கண்டறிந்து, அதன் பின் சிகிச்சை அளிப்பதே மிகவும் சரியானது.

அக்குள் பகுதியின் கருமை நிறத்தினை போக்குவதற்கு எலுமிச்சை பயன்படுத்தக் கூடிய சில இயற்கை வழிகள் உள்ளன.

1. எலுமிச்சை சாறு.
எலுமிச்சை சருமத்தை சுத்தம் செய்வதுடன், பக்டீரியா போன்ற தொற்றுக்கலில் இருந்தும் தீர்வைப் பெற்றுத் தரும்.
எலுமிச்சையை வெட்டி அக்குள் பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதன் போது இறந்த கலங்கள் நீங்கி அக்குள் பகுதி பிரகாசமாக மாறும்.

2. எலுமிச்சை மற்றும் சீனி ஸ்கிறப்.
இந்த முறையினால் அக்குள் பகுதிகல் பிரகாசமாக மாறும். 1 மேசைக்கரண்டி சீனி எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து அக்குள் பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

3. எலுமிச்சையுடன் ஒலிவ் எண்ணெய்.
சம அளவு ஒலிவ் எண்ணெய் எலுமிச்சை சாறு சேர்த்து அக்குள் பகுதிகளில் தடவி 40 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.

மேலும் சில குறிப்புக்கள்:
1. சமையல் சோடா.
சமையல் சோடாவை நீரில் கலந்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை அக்குள் பகுதிகளில் தடவி ஸ்கிறப் செய்து கொள்ளவும். சிறிது நேரத்தில் நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.

2. சீனி மற்றும் தேங்காய் எண்ணெய்.
இறந்த கலங்களை நீக்கி சருமத்தின் கருமை நிறத்தைப் போக்கும் சிறந்த கலவை சீனி மற்றும் தேங்காய் எண்ணெய். ஒரு தேக்கரண்டி சீனியை எடுத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து அக்குள் பகுதிகளில்
ஸ்கிறப் செய்து நீரினால் கழுவவும்.

3. உருளைக் கிழங்கு.
உருளைக் கிழங்கு இயற்கையாகன சுத்தப்படுத்தியாகச் செயற்படும். இதனை துண்டுகளாக வெட்டி தேய்ப்பது அல்லது சாறாக எடுத்து அக்குள் பகுதிகளில் பூசி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

4. பால்
பாலில் விட்டமின்கள், கனியுப்புக்கள் காணப்படுவதனால் சரும நிறத்தை மேம்படுத்த முடியும். அதனை அக்குள் பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தினமும் 2 அல்லது 3 தடவைகள் செய்து வரலாம்.

5. தேன்
சுத்தமான தேனை அக்குள் பகுதியில் தடவி வருவதனால் கருமை நிறத்தைப் போக்க முடியும். அல்லது தேனுடன் கற்றாளைச் சாறு, தேங்காய் எண்ணெய், பால் போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

6. தக்காளி.
தக்காளியை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்துவதனால் கருமை நிறத்தை நீக்கி வெண்மையைப் பெற முடியும். தக்காளி சாற்றை எடுத்து, முடிகளை அகற்றிய பின்னர் அக்குள் பகுதிகளில் தடவி சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும். முழுமையான தீர்விற்கு ஒரு வாரம் தினமும் 3 தடவைகளாவது செய்து வர வேண்டும்.

7. வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காய் கரும்புள்ளிகளை அகற்றி வெண்மையை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது. வெள்ளரிக்காய் சாற்ருடன் சிறிதளவு மஞ்சள், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அக்குள் பகுதிகளில் தடவி சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும். இதனை குறித்த கால இடைவெளியில் செய்து வருவதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.

Read Previous

மட்டன் கொத்து கறி இந்த மாதிரி செஞ்சு குடும்பத்தை அசத்துங்க..!!

Read Next

தொடர்ந்து 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை மையம் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular