
காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் இதை மட்டும் செய்தால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
குழந்தைகளின் காதுக்குள் பூச்சி நுழைவது என்பது ஆபத்தை உண்டாக்கும். எனவே குழந்தைகளை தூங்க வைக்கும் பொழுது பார்த்து பூச்சிகள் ஏதும் பக்கத்தில் இல்லாதவாறு தூங்க வைப்பது அவசியமான ஒன்று. இந்நிலையில் காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குழந்தைகளின் காதுக்குள் பூச்சி நுழைந்தால் மயக்க மருந்து கொடுத்து எடுக்க வேண்டி இருக்கும். பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் நுழைத்து பூச்சியை எடுக்க முயலும் போது உள் காதில் உள்ள மென்மையான பகுதிகள் பாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி அதில் காயம் கூட ஏற்படலாம். பெரிய பூச்சிகள் உடைந்து விட்டால் காதில் உள்ள ஜவ்வுகளை பிடித்துக் கொண்டு உள்ளையே தங்கிவிடும். இதனால் வீட்டில் எந்த விதமான மருத்துவமும் ஒத்து வராது. உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது. சின்ன சின்ன பூச்சிகளோ அல்லது எறும்போ நுழைந்து விட்டால் வீட்டில் முதலுதவி போன்று மருத்துவம் செய்யலாம்.காது நிறைய எண்ணெய் அல்லது உப்பு கரைசலை ஊற்றி பார்க்கலாம் அதனால் பூச்சியின் மூச்சு தடைபட்டு உடனடியாக இறந்துவிடும் அதை எளிதாக வெளியே எடுத்து விட முடியும் இது எறும்பு மற்றும் சின்ன பூச்சிகளுக்கு மட்டுமே பயனளிக்கும். பெரிய பூச்சிகள் வண்டுகள் போன்றவற்றிற்கு பயனளிக்காது. பெரிய பூச்சிகள் வண்டுகள் செல்லும் போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.