தேவையான பொருள்: தண்ணீர் 200 மி.லி கருப்பு மிளகு பொடி ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் கருப்பு மிளகு,சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக நீக்க முடியும். மேலும் புதினா இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும்.