அடிபிடித்த கருகிப்போன பாத்திரத்தை கழுவுவதற்கு இனி சிரமப்பட வேண்டாம் பெண்களே..!! இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

பொதுவாகவே தினந்தோறும் சமைக்கும் பெண்களுக்கு பாத்திரம் கழுவுவது என்பது அன்றாட வாழ்வில் நடக்கக்கூடிய ஒரு வேலையாகும். இந்நிலையில் அடிபிடித்த கருகிப்போன பாத்திரத்தை கழுவும் போது நேரமும் அதிகரிக்கும் இதை அகற்றுவதற்காக சிறிது முயற்சியும் போட வேண்டும் கையும் வலிக்கும். இந்நிலையில், சுலபமாக அடிபிடித்த மற்றும் கருகிப்போன பாத்திரத்தை எவ்வாறு கழுவுவது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

 

சமைக்கக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இந்நிலையில், நாம் ஸ்நாக்ஸ் சாப்பிட பயன்படுத்தப்படும் தக்காளி சாஸை பயன்படுத்தி பாத்திரத்தில் படிந்திருக்கும் கரையை எழுதி அகற்றி விடலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆமாம் கறை படிந்த பாத்திரத்தில் தக்காளி சாஸ் நன்கு தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் பாத்திரத்தை கழுவினால் கரைகள் அனைத்தும் நீங்கி பாத்திரம் பளபளப்பாக இருக்கும். அடுத்ததாக எலுமிச்சை சாறை அடிபிடித்த மற்றும் கரை பிடித்த பாத்திரத்தில் நன்கு தடவி அப்படியே வைத்து விட வேண்டும் பிறகு அதில் உள்ள அமிலம் கரையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிவிடும் இறுதியாக பாத்திரத்தை கழுவினால் பாத்திரம் மிகவும் பளபளவென்று ஜொலிக்கும். இறுதியாக, வீட்டில் பேக்கிங் சோடா இருந்தால் அதை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து அடிபிடித்த பாத்திரத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால் கரைகள் சுலபமாக நீங்கும்.

Read Previous

பெண்கள் தினமும் இதை செய்தாலே போதும்..! லட்சுமியின் அருள் வீட்டில் நிரந்தரமாக கிடைக்கும்..!!

Read Next

மக்களே உஷார்.. மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும் உணவுகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular