அட்டகாசமான பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

அட்டகாசமான பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி….

 

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்

4-6 பரிமாறுவது

1/2 கிலோ மட்டன்

1/2 கிலோ சீரக சம்பா அரிசி

2 பெரிய வெங்காயம்

2 டேபிள்ஸ்பூன் அரைத்த சின்ன வெங்காயம்

2 தக்காளி

1பொடியாக நறுக்கிய கொத்தமல்லி புதினா இலை

4-6 பச்சை மிளகாய்

1/4 கப் தயிர்

1/2 எலுமிச்சை சாறு

4 கப் தண்ணீர்

பிரியாணி மசாலா அரைக்க

10பட்டை (1 இன்ச் அளவு)

10 லவங்கம்

4 ஏலக்காய்

10 வர மிளகாய்

1 ஜாதிபத்திரி

1 மராத்தி மொக்கு

1 அண்ணாச்சி பூ

 

சமையல் குறிப்புகள்

 

முதலில் குக்கரில் எண்ணெய் நெய் விட்டு சூடாக்கவும் பிறகு இதில் பெரிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் அதன் பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்

 

இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பிறகு தக்காளி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்

 

இப்போது இதில் வறுத்து வைத்துள்ள பிரியாணி மசாலா மற்றும் தயிர் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கிளறவும் அதன்பிறகு மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் பிறகு இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் விடவும்

மட்டன் வெந்த பிறகு இதில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறவும் தண்ணீர் நன்றாக வற்றி வரும் பொழுது இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

 

இப்போது குக்கரை மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து அடுத்த 15 நிமிடம் கழித்து மெதுவாக கிளறினால் சுவையான நம்முடைய பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயார்..

Read Previous

சுவையான முட்டை மசாலா இப்படி செஞ்சு அசத்துங்க..!! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

Read Next

ஊமத்தை என்பது என்ன?.. ஊமத்தையின் நன்மைகள் தீமைகள் என்ன?.. ஊமத்தையின் பயன்பாடுகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular