Oplus_131072
பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும் தெரியாது.
அந்த
பெண் யோசிக்கின்றாள்:
“ நான் கீழே விழப்போகின்றேன் என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்.. அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று.
ஆனால் அந்த
ஆண் யோசிக்கின்றான்:
“ மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை? ”.
இந்த படம் சொல்லும் நீதி:- எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது. அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.
இது வாழ்க்கை, வேலை, குடும்பம், நண்பர்கள், உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும் இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது.
நாமும் & நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..




