நாம் அன்றாட வாழ்வில் அனைவரும் அதிகம் விரும்பும் உணவு இறைச்சி வகையான உணவுகளை தான். ஆனால் அதில் ஆபத்து இருக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. பழம் காய்கறிகள் அதைவிட மனிதர்கள் அதிகமாக விழா காலங்களிலும், சாதாரண நாட்களிலும் அதிகமாக உண்ண ஆசைப்படுவது இறைச்சி சம்பந்தமான உணவுகளை தான்.
இந்நிலையில் மருத்துவர்கள் இதை அதிகமாக உண்பது பல்வேறு உடல்நல பிரச்சினைகளை வழிவகுக்கும் என்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இறைச்சி அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சில நேரங்களில் குடலின் செரிமான செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும் அளவிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சிவப்பு இறைச்சி கோழி சாப்பிடுவதை குறைத்துவிட்டு மீன்கள் சாப்பிடுவது நன்மை அளிக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.