தமிழகத்தில் பல அரசு பள்ளிகளிலோ அல்லது தனியார் பள்ளிகளிலோ மாணவ மாணவிகள் சிறு வயதிலேயே போதை பொருட்களுக்கோ போதை பழக்கத்திற்கும் அடிமையாகி இருப்பது தெரிகிறது, இவர்களை சரி செய்யும் இடத்தில் தமிழக அரசு பள்ளிகளுக்கு உத்தரவு விட்டுள்ளது..
அனைத்து பள்ளிகளிலும் புகார் குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மாணவ மாணவிகளின் செயல்களில் கவனம் கொள்ளும் வகையிலும் மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்தால் உடனே அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பாலியல் துன்புறுத்தல் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கை பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கிடையே நல்ல முற்போக்கு சிந்தனைகளை வளர்த்த வேண்டும் என்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும் மாணவர்களைப் பற்றி முழு தகவல்களையும் அந்தந்த பள்ளிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது, மாணவர்களை சரியான வழிகாட்டலோடு நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளது..!!