பாஜக மூத்த தலைவரான அமித்ஷாவை, ஓபிஎஸ் 20 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் தான் புதிதாக கட்சி தொடங்க இருப்பதாகவும் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்துவார் என கூறப்படுகிறது.




