காசாவில், 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. கான் யூனிஸ் பகுதியில் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டு இந்த திருமணம் நடைபெற்றது. போரால் உருக்குலைந்து, லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழலில் இந்த திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமக்கள் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியிருந்தனர். ஐ.நா. சார்பில் காசா மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.



