Oplus_131072
பத்து துளசி இலை, பாதி வெற்றிலை, ஒரு கற்பூரவள்ளி இலை மூன்றையும் கசக்கி போட்டு ஒரு டம்ளர் நீரில் அரை டம்ளராக சுண்ட காய்ச்சி தேவைக்கு தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க சளி தொந்தரவுகள் குறையும்.. நன்றாக கொதிக்க வைத்த நீரில் கற்பூரவள்ளி இலைகளை மட்டும் கசக்கி போட்டு அந்த கொதித்த நீரில் வரும் ஆவியை முகத்தில் காட்டி சுவாசிக்க கண் மூக்கு நெற்றி பகுதியை சுற்றி இருக்கும் சைனஸ் பிரச்சனைகள் குறையும்…
துளசி செடி ,வெற்றிலை செடி, கற்பூரவள்ளி செடி மூன்றுமே வீடுகளில் இருக்க வேண்டியது.. இந்த செடிகள் இருக்கும் வீடுகளில் சளி பிரச்சனை இருக்காது சளி பிரச்சனைக்கு மருத்துவ செலவும் இருக்காது..




