
பொதுவாக வீடுகளில் முள்ளங்கி சாம்பார் வைப்பார்கள். ஆனால் இதை சிறியவர்கள் சாப்பிட மாட்டார்கள். இதனால் இந்த முள்ளங்கியை வைத்து ஒரு சுவையான சட்னி தயார் செய்து எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
முள்ளங்கி – 100 கிராம் (தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும் )
குழம்பு கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 4 பல்
இஞ்சி துண்டு – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 8
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/ 2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
இந்த சட்னி தயாரிப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பிறகு இதில் நாம் நறுக்கி கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முள்ளங்கியை போட்டு ஒரு 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
மேலும் இதை தனியாக ஒரு பவுலில் மாற்றிவிட்டு, அதே கடாயில் எண்ணெய் ஊற்றி குழம்பு கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். மேலும் அதில் வரமிளகாய் பூண்டு, புளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு,அதோடு நாம் வதக்கி வைத்துள்ள முள்ளங்கியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மேலும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து, சட்னியில் போட்டுக் கொள்ளவும். இப்போது நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த முள்ளங்கி சட்னியை சுட சுட இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.