உங்களுக்கு முகத்தில் ஐஸ்கட்டி தடவும் பழக்கம் இருக்கிறதா..!! மருத்துவர்களின் எச்சரிக்கை இதோ..!!

நாம் அனைவரும் நமது முகம் பொலிவு அடைய வேண்டும் என்பதற்காக தினமும் ஐஸ் கட்டியை நமது முகத்தில் தேய்ப்பதுண்டு. இது நிறைய பேருக்கு வாழ்க்கை முறையில் ஒன்றாகவே மாறிவிட்டது. ஆனால் இதை தேய்ப்பதனால் கிடைக்கும் நன்மைகளைப் போல் தீமைகளும் அதிக அளவில் இருக்கிறது. அவை என்னென்னவென்று இந்த பதிவில் காண்போம்.

நமது முகத்தில் நீண்ட நேரம் ஐஸ்கட்டியை நேரடியாக தேய்த்தால் சருமம் எரிச்சல் அடையும் என்றும் சிவந்து கொப்பளமாக கூட மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் நமது சருமம் மறுத்து போக கூட வாய்ப்பிருக்கிறது.

நமது முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தை இந்த ஐஸ்கட்டி உறிஞ்சும். இதன் காரணமாக நமது சருமம் வறண்டு போய் காணப்படும். யாருக்கெல்லாம் வறண்ட சருமம் இருக்கிறதோ அவர்கள் ஐஸ்கட்டியை தேய்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஐஸ்கட்டியை முகத்தில் அடிக்கடி தேய்த்தால் சருமம் சேதப்படும். இதன் குளிர்ச்சி நமது முகத்தில் இருக்கும் மூக்கு மற்றும் கண்களின் மென்மையான அடுக்குகளை சேதப்படுத்தும். இதனால் நமது முகத்தில் சிகப்பு புள்ளிகள் கூட வரலாம்.

முகத்திற்கு ஐஸ் கட்டி தடவுவது எவ்வளவு நல்லது என்றாலும் உங்களது முகத்தில் வியர்வையோ தூசியோ அல்லது அழகு சாதன பொருட்களோ இருந்தால் இந்த ஐஸ்கட்டி தேய்ப்பதன் மூலம் அது நமது சருமத்தின் துணைகளை அடைத்து வெடிப்புகளை ஏற்படுத்தும்.

உங்களது முகத்திற்கு ஐஸ் கட்டியை நேரடியாக பயன்படுத்தாமல் ஒரு சுத்தமான துணியை வைத்து முகத்தில் தடவலாம். அதேபோல இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஐஸ்கட்டியை உங்களது முகத்தில் தேய்க்க வேண்டாம். மேலும் உங்களது முகத்தை நன்றாக கழுவி காய்ந்த பின்னர் தான் ஐஸ்கட்டியை தடவ வேண்டும். இதையெல்லாம் செய்தால் உங்களது முகம் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read Previous

அடேங்கப்பா, 1007 காலிப்பணியிடங்களுடன் வேலைவாய்ப்பா..!! வெறும் 10ஆம் வகுப்பு, முடித்து இருந்தால் போதும்..!!

Read Next

இந்த நெய்யை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular