உங்கள் உடலுக்கு பல நன்மையை கொடுக்கும் கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்று தெரியுமா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய கருவேப்பிலையை வைத்து குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் : 

உப்பு- தேவையான அளவு

புளி- சிறிய எலும்பிச்சை அளவு

தக்காளி- 3

மிளகாய் தூள்-  2 டேபிள் ஸ்பூன்

குழம்பு தூள்- 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்-2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள்- சிறிதளவு

சீரகம்- 1 டீஸ்பூன்

பூண்டு- 5

கடுகு- 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 2

சுண்ட வத்தல் 5

நல்லெண்ணைய்- 5 ஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கப்

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை : 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வேறொரு கடாயை எடுத்து ஐந்து ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி சுண்டவத்தல் சேர்த்து வறுத்து விடுங்கள். இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு வத்தல் இரண்டு டீஸ்பூன் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு எண்ணெயில் பூண்டு வெங்காயம் சீரகம், மிளகாய் கடுகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு பெருங்காயத்தூளை சிறிதளவு சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் இரண்டு டீஸ்பூன் குழம்பு தூள் சேர்த்து மூன்று தக்காளியை ஜாரில் நன்றாக அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் வெண்ணீர் சேர்த்து அரைத்த கருவேப்பிலையை அதில் போட்டு புலி தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் உப்பை சேர்த்து தண்ணீரை தேவைப்பட்டால் மீண்டும் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். என்னை நன்றாக மிதக்கும் அளவிற்கு வந்த பிறகு இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் உடலுக்கு பல நன்மையை சேர்க்கும் கறிவேப்பிலை குழம்பு தயார்.

Read Previous

இரவில் எந்தெந்த உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மரணம் வரை மனைவி..!! கண்டிப்பாக கணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular