நமது குழந்தைகள் பல பேருக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கும். அதனால் பல தவறுகளை செய்து விடுவார்கள். இதை அதிகரிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. நமது பள்ளிப் பருவ காலங்களில் நாம் ஏதேனும் தவறுகளை செய்துவிட்டால் நமது ஆசிரியர் நம்மளை தோப்புக்கரணம் போட சொல்லி உத்தரவிடுவார்கள். அது வெறும் தண்டனை கிடையாது. அது ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆகும். அப்படி செய்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவில் காண்போம்.
தினசரி ஒரு ஐந்து நிமிடங்கள் உங்கள் குழந்தைகள் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளையில் இருக்கும் நியூரான்கள் புத்துணர்ச்சி அடைந்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் உங்கள் குழந்தைகள் மந்தமான மனநிலையில் இருந்தால் அதையும் சரி செய்ய தோப்பு கரணம் உதவி செய்யும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் அறிவு கூர்மை அதிகரிக்கப்பட்டு உடலில் கால்கள் மற்றும் இழப்பு பகுதியில் உள்ள தசைகள் வலிமை பெறும். அதுமட்டுமில்லாமல் நமது உடலில் இருக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
ஆகவே இத்தனை நன்மைகள் கொண்ட தோப்புக்கரணத்தை போட நமது குழந்தைகளுக்கு சொல்வோம். அதனால் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றதாக இருக்கும்.




