Oplus_131072
பாத எரிச்சல் குணமாக இதை மட்டும் செய்தால் போதும்..!!
இந்த காலகட்டத்தில் 30 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு பல பேருக்கு பாத எரிச்சல் என்பது இருக்கிறது. நமது தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் தாத்தாக்களும் பாட்டிகளும் தான் பாதம் எரிகிறது ஐயா என்று நம்மிடம் கூறுவார்கள். ஆனால் இன்று நாமே பாதம் எரிகிறது என்று கூறுகிறோம். இதற்கான காரணம் என்னவென்றால் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றாமல் இருப்பதுதான் முதல் காரணம் உணவே மருந்து என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இன்னொன்று ஆரோக்கியமான செயல்களையும் செய்யாமல் இருப்பதுமே இதற்கு காரணமாகும். இந்நிலையில் இந்த பாத எரிச்சலை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறிது மஞ்சள் தூளை நீரில் கலந்து பாதங்களில் தடவி உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் துடைக்க குணமாகும். சிறிது தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து பாதங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்தால் உடனே பாத எரிச்சல் அடங்கும்.




