உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம் கிராமத்தில் போலே பாபா என்கின்ற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார். அந்த கூட்ட நெரிசல் சிக்கி இதுவரை 122 பேர் பரிதாபாய் உயிர் இழந்து உள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பெண்களே ஆவார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹத்ராஸ் கூட்ட சிக்கி உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும். உயிரிழந்தவர்களுக்கு தகுந்த நிவாரணமும் வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கிடையே ஆன்மிக நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தல ரூ.இரண்டு லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.