எண்ணெய் குளியலும் அதனால் ஏற்படும் பயன்களும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

எண்ணெய் குளியலும்
ஏற்படும் பலன்களும்

எண்ணெய் குளியல் காலை 6.30 – க்குள் தொடங்கி விட வேண்டும். இதமான வெந்நீரில் சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தி குளிக்க வேண்டும். எளிமையான உணவுகள்
உண்ண வேண்டும்.
எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம்கூடாது.கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது.

எண்ணெய்க்குளியல் செய்வதால் ஏற்படும் பலன்கள்
உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும்,
ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலைமுடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

*பெண்களும் எண்ணை குளியலும்.*

ஞாயிறு : வடிவமும் அழகும் போய்விடும்.
திங்கள் : அதிகப் பொருள் சேரும்.
செவ்வாய் : துன்பம் வரும்
புதன் : மிக புத்தி வந்திடும்.
வியாழன் :உயரறிவு போய்விடும்.
வெள்ளி : செல்வம் மிகும்.
சனி : ஆயுள் அதிகமாகும்.

*ஆண்களும் எண்ணெய் குளியலும்.*

திங்கள் : முடக்கு வாதம் வரும்.
செவ்வாய் : முதுகு வலி,
மாலைக்கண் நோய் வரும்.
வியாழன் :கால் குடைச்சல் வரும்.
வெள்ளி : முக வாதம் வரும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க நினைக்கும் அன்பர்கள்
-சனி, புதன் நாட்களில் குளிக்கவும்.
நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள்?
புதன் அறிவினையும், சனி ஆயுளையும் உடல் நலத்தினையும் தருவதாக உயர்வாக நினைத்தார்கள் – மதித்தார்கள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. வெது வெதுப்பான சுடு நீரில் தான் குளிக்க வேண்டும்.

Read Previous

மாத்திரை இல்லாமல்… இயற்கையாகவே நல்ல தூக்கம் வர வேண்டுமா..?? இதோ உங்களுக்கான எளிய 8 பயனுள்ள வழிகள்..!! 

Read Next

காமாட்சி விளக்கு மட்டும் ஏன் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular